ஊடக நிறுவனங்கள் நாட்டை பற்றி சிந்தித்து பொறுப்புடன் செயற்படவேண்டும்! திலும் அமுனுகம

சில ஊடக நிறுவனங்கள் எமது அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர நிறைய வேலைத்திட்டங்களை செய்தார்கள். ஆனால், இன்று பிழைகளை, பிரச்சினைகளை மட்டும் வெளிக்காட்ட முயற்சி செய்கின்றனர். என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பொது நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சில ஊடக நிறுவனங்கள் எமது அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர நிறைய வேலைத்திட்டங்களை செய்தார்கள். நாம் இல்லையென்று சொல்லமாட்டோம்.

அப்போதிருந்த நிலைமைக்கு அமைய எமக்கு நிறைய ஊடக நிறுவனங்கள் ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

ஆனால், இன்று ஊடக நிறுவனங்களை பார்க்கும் போது, கூட்டாக செல்லும் வகையில் இங்குள்ள பிழைகளை, பிரச்சினைகளை மட்டும் வெளிக்காட்ட முயற்சி செய்கின்றனர். சில ஊடக நிறுவனங்கள் அதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த அரசாங்கம் இருக்கும் போது அவர்களுக்கு நன்று. இந்த அரசாங்கம் அவர்களுக்கு சரியில்லை. அப்படியான ஊடகங்கள் எதுவென்று மக்களுக்கு தெரியும். அவற்றை மக்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்.

ஆனால், ஏனைய ஊடக நிறுவனங்கள் நாட்டை பற்றி சிந்தித்து பொறுப்புடன் செயற்படவேண்டும்.

கொரோனாப் பெருந்தொற்றுடன் இன்று உலகில் எந்தவொரு அரசாங்கமும் மிகவும் கடினமான முறையில் தான் செயற்படுகின்றது.

இன்று உலகில் அநேகமான நாடுகளை எடுத்துக்கொண்டால் அந்த அரசாங்கங்கள் அந்த நாட்டு மக்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

ஏனெனில் மக்கள் உருவாக்கிக்கொண்ட அரசாங்கத்தை அவர்கள் விமர்சிக்க தான் செய்வார்கள் அயல் நாட்டு அரசாங்கத்தை அவர்களால் விமர்சிக்க முடியாது.

கொரோனா காரணமாக மக்கள் கஷ்டத்தில் உள்ளார்கள், நாடும் கஷ்டத்தில் உள்ளது, அரசாங்கமும் கஷ்டத்தில் உள்ளது.

அரசாங்கத்திற்கு கஷ்டம் ஏற்பட்டால் சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும், சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கும், டொலர் பற்றாக்குறை ஏற்படும். சுற்றுலா பயணிகள் வருகை குறையும் இப்படியான பிரச்சினைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *