விமானத்தில் உலகம் சுற்றும் இளம் யுவதி இலங்கையில்!

இலகு ரக விமானத்தில் உலகை சுற்றி வரும் பெல்ஜியம் நாட்டவரான சாரா ரதர்போர்ட் இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

உலகை சுற்றி வந்த இளம் பெண் என்ற கின்னஸ் சாதனையை படைக்க சாரா திட்டமிட்டுள்ளார்.

19 வயதான அவர் தனது உலக சுற்றுப்பயணத்தை ஆகஸ்ட் 18, 2021 அன்று தொடங்கினார்.

52 நாடுகளில் உள்ள 5 கண்டங்களில் 51,000 கி.மீ தூரத்தை கடப்பதே அவரது இலக்கு. சாரா 2022 ஜனவரி நடுப்பகுதியில் தனது பயணத்தை முடிக்க உள்ளார்.

56 ஆவது தரிப்பிடமாக அவர் இலங்கை வந்துள்ளார். சாரா ரதர்போர்ட் பயணிக்கும் விமானம் ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட உயர் செயற்திறன் கொண்ட ultralight விமானமாகும்.

இந்த விமானம் மணிக்கு 300 கிலோ மீற்றர் வேகத்தில் பறக்கக் கூடியது. நீண்ட தூர பயணத்திற்காக இந்த விமானம் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இரத்மலானை கொழும்பு சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் சாரா ரதர்போர்ட்டை வரவேற்றதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *