சுன்னாகம் வாழ்வகத்தின் தலைவரும், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான ரவீந்திரனுக்கு பாராட்டு விழா வாழ்வகத்தில் இடம்பெற்றது.
இந்த வருடத்திற்கான யாழ் விருது பெற்றுக்கொண்டதை கௌரவிக்கும் முகமாக இடம்பெற்ற பாராட்டு விழாவில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ். அரச அதிபர் க.மகேசன், யாழ். மாநகர ஆணையாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரைகளை வழங்கினர்.
