மனசாட்சிக்கு அமைய செயற்பட்ட காரணத்தால் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும், யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை, அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் ஒப்பந்தம் அமைச்சரவை அனுமதியுடன் முறையாக கைச்சாத்திடப்படவில்லை.
ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்தப்படவுமில்லை என்பதை அமைச்சரவை உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் நாட்டு மக்களுக்கும் நீதிமன்றிற்கும் அறிவித்தோம்.
அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக செயற்படும்போது அமைச்சு பதவிகளை இழக்க நேரிடும் என்பதை நன்கு அறிவோம்.
அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை காட்டிலும் மனசாட்சிக்கமைய நாட்டுக்காக செயற்பட வேண்டும் என்ற காரணத்தினால் யுகதனவி விவகாரத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.
மனசாட்சிக்கமைய செயற்பட்டுள்ள காரணத்தினால் அமைச்சு பதவிகளை துறக்க வேண்டிய அவசியம் கிடையாது.
அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறியுள்ளோம் என ஜனாதிபதி கருதினால் எம்மை தாராளமாக அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கலாம்.
அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை காட்டிலும் மனசாட்சிக்கமைய செயற்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.