
சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை ஆரம்பமாகி நடைபெற்ற இரண்டாம் தவணை பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்றவர்களுக்கும் விடுமுறை எடுக்காது நூறு வீதம் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களையும் தெரிவு செய்து கொப்பிகள் பேனைகள் பாடசாலை அதிபர் பி. காமலநாதன் தலைமையில் வழங்கப்பட்டன.
இதற்கான நிதி உதவியை கனடாவில் வசிக்கும் கல்முனையை சேர்ந்த சமூகசேவையாளர் க. விஸ்வலிங்கம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.