நியமனத்துக்காக யாருடைய காலடியிலும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை! வேலுகுமார் எம்.பி

தகைமையை பூர்த்திசெய்த மலையக ஆசிரிய உதவியாளர்களே, ஆசிரிய சேவைக்கான நியமனத்தை கோருகின்றனர். அதற்கு யாருடைய காலடியிலும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டியில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், மத்திய மாகாணத்தின் ஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய சேவைக்கு உள்வாங்குவது, கடந்த இரு வருடங்களுக்கு அதிகமான காலம் இழுபறி நிலையில் உள்ளது.

அவர்களின் நியமனம் தொடர்பாக கல்வி அமைச்சர் உட்பட அனைத்து அதிகார மட்டத்தில் உள்ளவர்களுக்கும் நாம் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

நாடாளுமன்றத்தில் பல தடவைகள் இப்பிரச்சினையை சுட்டிக்காட்டி இருக்கின்றோம். அதனடிப்படையில் கடந்த 15 ஆம் திகதி, 306 பேருக்கான நியமங்கள் வழங்குவதற்குரிய கடிதம் அனுப்பப்பட்டது.

எனினும், அரச தரப்பில் உள்ள மலையக பிரதிநிதிகளின் தலையீட்டால் மீண்டும் இந்நியமனம் வழங்கல் பிற்போடப்பட்டிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் அது நீண்டகால பிரச்சினையை ஏற்படுத்தும்! திஸ்ஸ விதாரண

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *