வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட 3000 இற்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடல்!

சிறு வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட 3,000 இற்கும் அதிகமான உணவகங்கள் சமையல் எரிவாயு மற்றும் பால்மா ஆகியனவற்றுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாகப் புறக்கோட்டையில் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், கொழும்பு நகரில் மாத்திரம், 80 சதவீதத்திற்கும் அதிகமான சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட ஏனைய உணவு விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள், பால்மா ஆகியவற்றுடன் மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

திறக்கப்பட்டுள்ள சில சிற்றுண்டிச்சாலைகளில் ஒரு கோப்பை பால் தேநீர் 85 ரூபாவரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *