சீனோபோர்ம் தடுப்பூசிக்காக செலவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த ADB இணக்கம்

சீனோபோர்ம் தடுப்பூசி கொள்வனவுக்காக இலங்கை அரசாங்கம் செலவிட்ட பணத்தை திருப்பி செலுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது.

இந்த தகவலை மருந்து பொருட்கள் உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று உறுதிபடுத்தினார்.

இதற்காக 85 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

தடுப்பூசி கொள்வனவுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *