முல்லைத்தீவு மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சினோபார்ம் தடுப்பூசித் திட்டம் கடந்த 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நேற்று(05) வரையான காலப்பகுதியில் 42,680 பேர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 50,000தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இன்று(06) ஐயன்கன் குளப்பகுதியில் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.