2021 ஆம் ஆண்டுக்கான மூதூர் பிரதேச கலாசார விழாவும் மூதூர் பிரதேச செயலகத்தினால் வெளியிடப்படும் “முத்து” எனும் மலர் வெளியீட்டு விழாவும் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாரக் தலைமையில் மூதூர் மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (29)மாலை இடம்பெற்றது.
இதன்போது இந்து, இஸ்லாமிய ,பௌத்த,கிறிஸ்தவ கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
அத்தோடு கலாசார விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி வெற்றிபெற்ற மற்றும் பங்குபற்றிய கலைஞர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அதிதிகளாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர், மூதூர் உதவி பொலிஸ் அத்தியட்சகர், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






