நாட்டில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகள் வெடிப்பு காரணமாக மக்கள் மண்ணெண்ணை மற்றும் விறகு அடுப்புகளுக்கு மாறி வருகின்றனர்.
எனினும், மண்ணெண்ணை அடுப்புகளின் விலைகளும் அதிகரித்துள்ளதால் மக்கள் விறகு அடுப்புகளுக்கு மாறி வருகின்றனர்.
முன்னர் விறகுகள் இதற்கென அமைக்கப்பட்ட விறகுகாலைகள் மற்றும் பலசரக்கு கடைகளிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தன.
ஆனால், தற்போது இந்த விறகுகள் சுப்பர் மார்க்கெட்டுக்களிலும் விற்பனை செய்வதை அவதானிக்க முடிகின்றது.
கட்டாக சுற்றி விற்கப்படும் இந்த விறகுப் பொதி 200 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுகின்றது.







