அம்பாறை – நிந்தவூர் கடற்கரையில் உயிருடன் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
சுமார் 3 அடி வரையான 150 கிலோ எடையுடைய கடலாமை ஒன்று நேற்று இரவு உயிருடன் கரையொதிங்கியுள்ளதாக நிந்தவூர் மீனவர்கள் தெரிவித்தனர்.
மீனவர்களால், கடற்றொழில் திணைக்கள உத்தியோகர்கள் பொது சுகாதார பரிசோதகர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்பாறை – கல்முனையில் பெரியநீலாவணை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கடலாமைகள் உயிருடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரை ஒதுங்கி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.