நாங்கள் உருவாக்கிய அரசாங்கத்திலிருந்து நாங்கள் ஏன் விலகி செல்ல வேண்டும் என்று, நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லும் எந்த எண்ணமும் எமக்கு இல்லை.
நுகேகொடையில் இருந்து மஹிந்த காற்று வீசிய நாள் முதல் மேற்கொள்ளப்பட்ட பயணத்தின் இறுதிப் பலனாக இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
ஜனாதிபதியுடன் முன்னோக்கி செல்வதே ஒரே நம்பிக்கை. ஆனால், நாட்டுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அது குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைப்பு: ஐந்து பெண்கள் கைது!