பெருமளவு டொலர்கள் கிடைத்துள்ளன என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்திருப்பது உண்மையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டிசில்வா தெரிவித்துள்ளார்.
கப்ராலும் ஏனையவர்களும் தெரிவிப்பது போல திடீரென பெருமளவு டொலர்கள் கையிருப்பில் வந்திருந்தால், அந்நியச் செலவாணிப் பிரச்சினையில்லை, கறுப்பு சந்தை பிரச்சினையில்லை, துறைமுகத்தில் சிக்குண்டுள்ள கொள்கலன்களை விடுவிப்பதிலம் பிரச்சினையில்லை.
டொலர் வீதம் வழமைக்கு திரும்ப வேண்டும். அதன் பின்னரே கப்ரால் தெரிவித்தது உண்மையா என்பது தெரியவரும். அது உண்மையா, பொய்யா என நாங்கள் பார்ப்போம்.
மத்திய வங்கி ஆளுநரிடம் எங்கிருந்து பணம் வந்தது என நாங்கள் கேள்வி எழுப்பியவேளை அவர் அதனை தெரிவிக்க முடியாது எனக் குறிப்பிட்டார்,
பேச்சுவார்த்தைகள் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் பணம் எங்கிருந்து வந்தது என்பதை தெரிவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த வருடம் மார்ச் 21ஆம் திகதி சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை காரணமாக இருக்கலாம் என ஹர்ச டிசில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த போக்குவரத்து சேவை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்! டக்ளஸ்