
முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் (SSP), தமிழ் நகைச்சுவை பேச்சாளருமான கே. அரசரட்ணம் தமது 70 ஆவது வயதில் நேற்று காலமானார்.
இவர் பொலிஸ் துறையில் சிறந்த சேவையினை வழங்கியிருந்ததுடன் ஈழத்து தமிழ் செயற்பாட்டுத் துறையில் முக்கிய பங்கினையும் வகித்திருந்தாா்.
அவரது இறுதிக்கிரியை எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனா்.
