வீட்டில் சீமெந்து தரையில் சறுக்கி விழுந்து மயக்கமுற்ற கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழிந்த சம்பவம் ஒன்று நேற்றிரவு பதிவாகியுள்ளது.
தோப்பூர் – சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த நிரஞ்சலராசா சரணிகா எனும் 19 வயதுடைய கர்ப்பிணி பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த பெண் சமயலறைக்குச் சென்று தண்ணீரை எடுத்துவரும்போது, வீட்டின் வரவேற்பு அறையில் சறுக்கி விழுந்து மயக்கமடைந்துள்ளார்.
பின்னர் உறவினர்கள் அவரை தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது இடையில் உயிரிழந்ததாகத் தெரியவருகிறநு.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
