வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் தாதியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் மற்றும் குறை நிரப்பு மருத்துவர் சங்கம் என்பவற்றைச் சேர்ந்த வடமாகாண தாதியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மருத்து கலவையாளர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைளை முன் வைத்து இன்று பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு ஆதரவாக வவுனியா வைத்தியசாலையிலும் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் இடம்பெற்றது.
அனைத்து தாதியருக்கும் ரூபா 5,000 ரூபா இடர் கொடுப்பனவு வழங்குதல், கர்ப்பிணி தாதிய உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்கல், கொவிட் பரிசோதனை பிரிவில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு போதிய வழங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைளை முன்வைத்து இப் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக நோயாளர்கள், மற்றும் வழமையான சிகிச்சைக்கு வருவோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இருப்பினும், அவசர நோயாளர் சேவைகளும் வழமை போல் இடம்பெற்று வருகின்றது.



