
2022 ஜனவரி 5ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நேற்றுத் தெரிவித்தது.
அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது என்று சங்கம் தெரிவித்தது.
பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்றுப் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கு முன்னர் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 14 ரூபாவாக இருந்த நிலையிலேயே தற்சமயம் மூன்று ரூபாவால் அது அதிகரிக்கப்பட்டுள்ளது.