இலங்கையில் ஒமிக்ரோன்: சர்வதேச தரவுத்தளத்தில் தேடியும் கிடைக்கவில்லை!

கடந்த வாரம் மூன்று நபர்கள் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வெளிப்படுத்தியுள்ள போதிலும், சர்வதேச தரவுத்தளங்களில் இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் சுகாதார அமைச்சகம் உடனடியாகக் கவனம் செலுத்தவேண்டும் என்று, சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

ஆய்வகத்தின் தரத்தை அங்கீகரிக்காமையால் இந்த நிலை ஏற்படலாம். அதனால், எமது சங்கம் குறித்த நிலைமையை தொடர்ந்தும் கண்காணித்து வருகிறது.

அதுமட்டுமன்றி, நீண்டகால அங்கீகாரம் பெற்ற ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்துடன் சோதனை நடத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தனிப்பட்ட தகராறுகளின் அடிப்படையில் சுகாதார அமைச்சு முடிவுகளை எடுப்பது கவலையளிக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *