ஹப்புத்தளை ‘அயிஸ்பீலி’ என்ற இடத்தில் பஸ் ஒன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த இச் சிறியரக பஸ் மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இவ் விபத்தில் நான்கு பேருக்கு காயங்கள் ஏற்பட்டு, ஹப்புத்தளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை.
ஹப்புத்தளை பொலிசார், மேற்படி விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






