
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.
நாட்டின் கிழக்கு பகுதியிலிருந்து சுமார் 300 கிலோமீற்றர் தூரத்தில் 21 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.