திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசாங்க வெளியீட்டுப் பணியகம் திறந்து வைத்தலும் , ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன பாண்டி கோரல அறிவித்துள்ளார்.
வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதம அதிதியாக கலந்து கொண்டு காலை 9.00 மணிக்கு இவ் அரசாங்க வெளியீட்டு பணிகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 10.00 மணிக்கு ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இடம்பெறவுள்ளது. இதிலும் அமைச்சர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வை ஊடக வலயமைப்பு செய்யவும், குறித்த செயலமர்வில் கலந்து கொள்ளவுள்ள ஊடகவியலாளர்கள் தங்களது வரவை மாவட்ட செயலக ஊடக அதிகாரியிடம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.






