கொழும்பு நோக்கிய ஆசிரியர் – அதிபர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி இடைநிறுத்தம் !

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

கொரோனா தொற்றின் நிலைமையை கருத்திற்கொண்டு வைத்தியர்கள் ஆலோசனை மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கண்டி முதல் கொழும்பு வரை முன்னெடுக்கப்பட்டு வந்த ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி பஸ்யாலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இன்று முதல் வெளிப்புறப் போராட்டங்கள் நிறுத்தப்படும் இருப்பினும் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகும் முடிவு தொடரும் என்றும் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் அறிவித்தனர்.

Leave a Reply