கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவரை கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நேற்று புதன்கிழமை கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தையல் இயந்திரம் என்பன களவாடப்பட்டது.
குறித்த நபர் கடை ஒன்றில் தையல் இயந்திரத்தை களவாடிச் சென்ற போது சிசிரிவி கமராவில் சந்தேக நபரின் காணொளி பதிவாகியது.
இந்நிலையில் களவாடப்பட்ட தொலைபேசிகளை விற்பனை செய்வதற்காக நகரப்பகுதிகளல் குறித்த நபர் சென்றிருந்த நிலையில் கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முட்படுத்துவதற்கு கோப்பாய் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






