பால்மா விலையை 200 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை

பால்மா விலையை 200 ரூபாவால் அதிகரிப்பு செய்தால் சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இறக்குமதியாளர்கள் கோருவது போன்று விலை அதிகரிப்பு செய்ய அரசாங்கம் தயாரில்லை என அவர் கூறினார்.

“கோவிட் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்திலும் ஏற்றுமதி இறக்குமதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கப்பல் கட்டணம், போக்குவரத்து கட்டணம் அதிகரித்து காணப்படுகிறது. பால்மா நிறுவனங்கள் மிகவும் அதிக அளவு விலை அதிகரிப்பு செய்ய நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளன. அவர்கள் கேட்பது போல 200 ரூபாய் வரை விலை அதிகரிப்பு செய்தால் சந்தையில் பால்மா நிரம்பி காணப்படும். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தால் அதனை செய்ய முடியாது.” என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

Leave a Reply