நாட்டிலுள்ள 12 வயதுக்கும் மேற்பட்ட சகல சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுக்குமாறு விசேட வைத்திய நிபுணர்களின் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
பல்வேறு சிக்கல்களை சந்தித்துவரும் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கப்படுகிறது.
புதுவருடம் பிறப்பதற்கு முன்னர் 12 வயதுக்கு மேற்பட்ட சகல சிறுவர்களுக்கும் கட்டாயம் தடுப்பூசி வழங்க வேண்டும் என கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.






