சமையல் எரிவாயு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்துள்ளன.
பொதுநலன் வழக்கு செயற்பாட்டாளர் நாகானந்த கொடிதுவக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட இது தொடர்பான மனு, நீதியரசர்கள் ருவான் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இது அறிவிக்கப்பட்டது.
சந்தையில் விநியோகிக்கப்பட்ட அபாயகரமான எரிவாயு கொள்கலன்களை மீளப் பெறுவதற்கும், மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவைக் கடைப்பிடிப்பதற்கும் எரிவாயு நிறுவனங்களும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையும் தவறிவிட்டதாக கொடிதுவக்கு தனது பிரேரணையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்நிலையில் நாகானந்தாவின் மனு ஜனவரி 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.






