
நாட்டில் கடந்த இரு மாதங்களுக்குள் டெங்கு நோய் பரவல் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்குள் 2017 ஆம் ஆண்டு டெங்கு பரவல் தீவிரமாகக் காணப்பட்டது. 2017 இல் சுமார் 180 000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதன் பின்னர் இவ்வாண்டில் மீண்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் 4,561 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். எனினும் டிசம்பரில் இந்த எண்ணிக்கை 8,740 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் மூன்றில் இரண்டு மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாவர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது மரணங்களின் எண்ணிக்கை கனிசமானளவு அதிகரித்துள்ளது. எவ்வாறிருப்பினும் இது ஆரம்ப காலங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகும்.
கொவிட் உள்ளிட்ட வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு நோய் ஏற்பட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படாது. எனினும் கர்பிணிகள் டெங்கு நோய்க்கு உள்ளாவது பாதிப்புக்களை ஏற்படுத்தும். எனவே கர்பிணிகள் இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





