கடந்த 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 1600 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ஹொராயின் 1268 கிலோ கிராம், கேரளக் கஞ்சா 7095 கிலோ கிராம், ஐஸ் போதைப் பொருள் 158 கிலோ கிராம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ள
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட 74 தடவைகள் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 1268 கிலோ கிராம் ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையைச் சேர்ந்த 119 பேரும், வெளிநாட்டவர்கள் 22 பேரும் இதன்போது சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளாதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், 151 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட விஷேட வளைப்பின் போது 7095 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், இலங்கையைச் சேர்ந்த 186 பேரும், வெளிநாட்டவர்கள் 07 பேரும் இதன்போது சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்
அதேபோன்று 73 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 158 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 98 பேர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.






