கோத்தாவுக்கு ‘கூ’!

பால்மா கொள்வனவு செய்வதற்காக மிரிஹானையில் வரிசையில் நின்றிருந்தவர்கள், ஜனாதிபதி பயணிக்கும் போது ‘கூ’ எனச் சத்தமிட்டு கிண்டல் செய்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அதனையடுத்து, அந்த வர்த்தக நிலையத்தை பொலிஸார், பலவந்தமாக பூட்டுப்போட்டு மூடிவிட்டனர் என்றும் பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், அவ்வாறு எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லையெனவும், அந்தச்செய்தி முழுமையாகப் பொய்யானது எனவும் இலங்கை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மிரிஹானவில் பால்மா கொள்வனவு செய்வதற்காக நின்றிருந்த வரிசை தொடர்பில் தேடியறியுங்களென ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *