புத்தளம் மாவட்டத்தில் தற்போது கடும் குளிரான காலநிலை காணப்படும் நிலையில், வெளிநாட்டு பறவைகள் சஞ்சரிப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச சிறுகடலை அண்டிய பல பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு பறவைகள் வருகை தந்துள்ளன.
குறித்த சிறுகடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கண்டல் தாவரங்களும், மீன்களும் காணப்படுவதால் இதனை உட்கொள்வதற்காக பல வகையான வெளிநாட்டு பறவைகள் இங்கு வருகை தருகின்றன.
இவ்வாறு வருகை தரும் வெளிநாட்டு பறவைகள் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






