ராமேஸ்வரத்தில் குவிந்த வெளியூர் பக்தர்கள்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சுவாமி தரிசனம் செய்வதற்காக ராமேஸ்வரத்திற்கு, வெளியூர் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற மிக முக்கிய ஆன்மிக தளங்களில் ஒன்று என்பதால் தமிழகம் மட்டும்மல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு முதல் ராமேஸ்வரம் வர தொடங்கியுள்ளனர்.

ராமேஸ்வரம் வந்த பக்தர்கள் ராமநாதசுவாமி திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் இன்று அதிகாலை முதலே புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பூஜை செய்தனர்.

பின்னர் ராமேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

சுவாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் அனைவரையும் திருக்கோவில் நுழைவுவாயிலில் நிறுத்தி முழுமையான உடல் சோதனை செய்து, முகக்கவசம் கட்டாயமாக அணிந்த பின்னர் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கோவிலுக்குள் சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நேற்று பிற்பகல் முதல் நாளை வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை மற்றும் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இன்று ஆயிரக்கணக்கானோர் கடலில் இறங்கி புனித நீராடி வருகின்றனர் .

மேலும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் ராமேஸ்வரம் வேர்க்கோடுவில் அமைந்துள்ள தேவாலயத்தில் மீனவர்கள் ஒன்று கூடி கூட்டு திருப்பலி பிரார்த்தனை நடத்தியுள்ளனர்.

அதில் கடலில் மீன் வளம் பெருக வேண்டும், மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை பிரச்சனை இன்றி மீன் பிடிக்க இறைவன் அருள் செய்ய வேண்டியும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வர வேண்டும் போன்றவற்றை பிரார்த்தனைகளாக வைத்து மீனவர்கள் கூட்டு திருப்பலி நடத்தினார்.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று இரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *