உத்தரதேவி நகர்சேர் கடுகதி ரயிலுடன் வனவாசல ரயில் நிலையத்துக்கு அருகாமையில் காரொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று சனிக்கிழமை நண்பகல் 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உத்தரதேவி நகர்சேர் கடுகதி ரயிலுடன், குறித்த கார் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில், கார் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கார் தீப்பற்றியமையின் காரணமாக காருக்கு பாரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காரில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ரயில் எஞ்சினுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.






