முந்தல் பிரதேச செயலகத்திற்குற்பட்ட பெருக்குவட்டான் கிராம சேவகர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
முந்தல் பிரதேச செயலாளர் விஜானி வசந்திகாவின் ஆலோசனையில், குறித்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் பெயர் விபரங்கள் கிராம சேவகர் ஊடாக பெறப்பட்டது.
இதன்போது பெருக்குவட்டான் கிராம சேவகர் ஆர்.பிரியந்தி மற்றும் மங்கள எளிய சமுர்த்தி வங்கி கள உதவியாளரும், பெருக்குவற்றான் கிராம சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரிமான எஸ்.கீர்த்தி லதா உட்பட சிலர் கலந்துகொண்டு குறித்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.






