ஹட்டன் புகையிரத நிலையத்தில், ஓய்வு பெறும் அறைகள் இன்னும் திறக்கபடாதால் யாத்திரிகர்கள் சிரமபட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
சிவனடிபாதமலை பருவ காலம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரம் ஆகும் நிலையில், புகையிரத மூலமாக வரும் யாத்திரிகர்களே இவ்வாறு சிரமப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்து வரும் யாத்திரிகர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் உள்ளது.
இக்கால பகுதியில் ஓய்வு பெற்று செல்ல அந்த அறைகள் மற்றும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டியது ஹட்டன் புகையிரத நிலைய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரபட்டுள்ளது.
இது குறித்து ஹட்டன் புகையிரத நிலைய அலுவலரிடம் கேட்ட போது அவர் புகையிரத திணைகளத்தால் ஓய்வறைகள் திருத்த வேலைகள் நடந்து கொண்டுள்ளது ஜனவரி மாதம் கடைசி பகுதியில் இந்த அறைகள் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்






