மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கண்காணிப்பின் கீழ் கொழும்பில் உள்ள யாசகர்களை நீராடச் செய்து புதிய ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, குறித்த யாசகர்கள் தொடர்பான தரவுகளும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்த வேலைத்திட்டத்தில் கிரேண்ட்பாஸ் மற்றும் புறக்கோட்டை காவல்துறையினரும் பங்குக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






