காரைநகர் – கசூரினா கடலில் குளித்த மாணவன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளார்.
இன்று மாலை 3.30 மணியளவில் குறித்த மாணவன் காணாமற்போன நிலையில், அவரைத் தேடும் பணிகள் கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்களினால் தேடப்பட்டுகிறார்.
கோண்டாவிலைச் சேர்ந்த 17 வயதுடைய லோகீஸ்வரன் என்ற மாணவனே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
கோண்டாவிலிருந்து 20 பேர் காரைநகர் கசூரினா உல்லாசக் கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
எனினும், ஒருவர் மீண்டு வந்த நிலையில், குறித்த மாணவன் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.






