அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பிரான்சிஸ் வின்சன் டீ போல் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இந் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சிரேஸ்ட சட்டத்தரணி சுகாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.








