இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு முன்னுரிமையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சிடம் கோரியுள்ளது.
இது தொடர்பில், கடிதம் ஒன்று குறித்த அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு குறைவடைந்துள்ளமையினால், அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான இறக்குமதியிலும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






