யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் உண்ணி காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாக நேற்று வைத்தியசாலைக்குச் சிகிச்சை பெற வந்த இருவருக்கு, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த நோய் தொற்றுக்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.
இவ்வாறு டெங்கு காய்ச்சலால் மந்துவில் கிழக்கு மற்றும் தனங்கிளப்பு பகுதிகளைச் சேர்ந்த இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நுணாவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு உண்ணி காய்ச்சலும் ஏற்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.






