திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறபா நகர் பகுதியில் உள்ள சந்தியில் வைத்து கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவரை சம்பூர் பொலிஸார் இன்று மாலை கைது செய்துள்ளனர்.
இவரிடமிருந்து பொதியிடப்பட்ட 130 கிராம் கேரளா கஞ்சாவினை சம்பூர் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மூதூர் – பால நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபராவார்.
குறித்த நபர் கேரளா கஞ்சாவுடன் வீதியில் நடமாடுவதாக இரானுவ புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இரானுவப் புலனாய்வாளர்கள் சம்பூர் பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர். இதனையடுத்து விரைந்து சென்ற சம்பூர் பொலிஸார் சந்தேகநபரை கேரளா கஞ்சாவுடன் கைது செய்திருந்துள்ளனர்.
சந்தேக நபர் சம்பூர் பொலிஸார் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் தொலைபேசி விற்பனை நிலையத்தில் திருடியவர் சிக்கினார்; மேலும் இருவர் கைது!






