விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை! வியாழேந்திரன் தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் இந்த புத்தாண்டில் புதுமைகள் பிறந்து வாழ்வு செழிக்கப்பட்டும், மகிழ்ச்சி தளைத்தோங்க பிரார்த்திக்கின்றேன்.

தனியார் தொலைக்காட்சியின் தீர்வு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட், மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாகத்தினை அரச பயங்கரவாதம் என்று கூறி மிக மோசமான முறையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சாடியிருந்தார். சில பிரதேச செயலகங்கள் தொடர்பாகவும் கருத்துகளை முன்வைத்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் தொடக்கம் உதவி அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் நிர்வாக பயங்கரவாதத்தினை மேற்கொள்வதாக கூறியிருந்தது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். அந்த விடயம் தொடர்பில் அவர் பகிரங்கமாக மன்னிப்புக்கோரவேண்டும்.

நாடாளுமன்றத்தில் கூட அவர் நிர்வாக பயங்கரவாதம் என்பதை கூறியிருந்தார். அதனை தொடர்ந்து பொதுவெளியில் தனியார் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியின்போதும் இவ்வாறான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

காணிக்கு பொறுப்பான மேலதிக அரச அதிபரின் பெயரை குறிப்பிட்டு காணிகளை அபகரிப்பதாகவும் முஸ்லிம்களுக்கு வழங்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவரை நிர்வாக பயங்கரவாதியாக சுட்டிக்காட்டியிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் எனத் தெரிவித்தார்.

திருமலையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *