‘Jaffna kings’ வெற்றிக்கேடயம்: பலருக்கு வாய்ப்பு வழங்கப்படும்! வாகீசன் தெரிவிப்பு

ஏ.பி.எல் சுற்றுத் தொடரில் வெற்றியீட்டிய ‘Jaffna kings’ அணியின் வெற்றிக் கேடயம் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டது.

அணியின் முகாமையாளரும், பணிப்பாளருமான ஹரிவாகீசன் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,

எமது அணியானது வடக்கு கிழக்கை மையப்படுத்தி தமிழ் வீரர்களை அணியில் இடம் பெறச் செய்தது.

வடக்கு கிழக்கில் துடுப்பாட்டத்தில் திறமையான வீரர்கள் பலர் இருக்கின்ற நிலையில், அவர்கள் தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு கடந்தகால யுத்தம் ஒரு காரணமாக அமைந்தது.

அதுமட்டுமல்லாது, துடுப்பாட்ட ஆடுகளம் வடக்கு கிழக்கு வீரர்களுக்கு ஓர் தடையாக இருக்கின்ற நிலையில் அதனை தற்போது படிப்படியாக நிறைவேற்றிக் கொள்வதை அவதானிக்க முடிகிறது.

இவரிடம் இடம்பெறவுள்ள போட்டிகளுக்கான வீரர்களின் தெரிவுகளில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் எமது அவதானிப்பில் உள்ள நிலையில் உரிய நேரத்தில் அதற்கான தெரிவுகளை மேற்கொள்வோம்.

ஆகவே, வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களை துடுப்பாட்ட நீதியில் சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்வதற்கு நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

புத்தாண்டில் முதல் கொலை சம்பவம் பதிவு: பரந்தனில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *