கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகபுரம் வீதியில் உள்ள சேவியர் கடை சந்தியில் அமைந்துள்ள பிரபல கட்டடப் பொருள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையத்தில் இன்று 10.30 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினரின் கடும் பிரயத்தனத்தினால் தீ பரவல் கட்டுப்பாட்டக்குள் வந்தது.

இதன்போது, கனகபுரம் முறிப்பு வீதியின் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதிகளவான மக்கள் கூடியிருந்தமையால் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை கட்டுப்படுத்த பொலிசார் கடமையில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு பிரிவினருடன் இணைந்து பொது மக்களும், வர்த்தகர்களும், பிரதேச சபை உத்தியோகத்தர்களும் துரிதமாக செயற்பட்டு சுமார் ஒரு மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மின்னொளுக்கினால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர். தீப்பரவல் காரணமாக பாரிய இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

கொண்டாட்டங்களால் நாட்டில் ஒமிக்ரான் தொற்று அதிகரிக்கும் அபாயம்! சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *