தலவாக்கலை – வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.
மடக்கும்புர தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான கந்தையா ரமணி என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நீர்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தலவாக்கலை பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட பின் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது நீர்தேக்கத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது கொலையா, என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.







