மக்களின் நன்மைகளை புறக்கணித்துவிட்டு, அரசாங்கம் இலாபத்தை தேடி ஒடுகின்றது எனவும், சமையல் எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டிசில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், எரிவாயு கலவை தொடர்பில், எதிர்கட்சி தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்த போதிலும், அரசாங்கம் பொய்சொல்லியுள்ளது.
சமையல் எரிவாயு கலவை மாற்றப்பட்டால், சிலிண்டரில் உள்ள எரிவாயு வேகமாக முடிவதற்கான அழுத்தம் ஏற்படும்.
மக்களின் நன்மைகளை புறக்கணித்துவிட்டு, அரசாங்கம் இலாபத்தை தேடி ஒடுகின்றது. சமையல் எரிவாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சரவை புறக்கணித்துவிட்டது.
மேலும், பொதுமக்களிற்கு நியாயமான விலைகளில் அரிசியை வழங்குவதற்கு அரசாங்கம் தலையிடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






