
பேலியகொட வனவாசல ரயில் நிலையத்துக்கு அருகில் பொறியியலாளர் பயணித்த சொகுசு கார் ரயிலுடன் மோதியதில் 55 வயதான பொறியியலாளர் உயிரிழந்துள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் வனவாசல புகையிரத கடவையில் திப்பிட்டிகொடவிலிருந்து வத்தளை நோக்கி பயணித்த வாகனத்துடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரயிலுடன் மோதிய கார் சுமார் 200 மீற்றர் தூரம் வரையில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும், இதன்போது கார் தீப்பிடித்து எரிந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்து இடம்பெற்ற போது புகையிரத கடவையில் உள்ள சகல சமிக்ஞைகளும் செயற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.





