கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர்

மூதூரைச் சேர்ந்த எம்.எம்.ஜவாத் கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளராக (APD) பதவியுயர்வு பெறுகிறார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் (SLEAS -1) சேர்ந்த எம்.எம். ஜவாத் (நளீமி) கிழக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளரினால் 2021.12.31 திகதிய EP/3/1/B/PF/SLEAS/23 கடிதத்திற்க்கமைவாக 2022.01.01 அன்று முதல் செயற்படும் வண்ணம் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளாராக (APD) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் கடந்த ஒரு வருட காலமாக கிழக்கு மாகாணத்தின் கல்வி திணைக்களத்தின் கல்வி தர நிர்ணயத்திற்கான மாகாண பிரதிக் கல்விப்பணிப்பாளாராக செயற்பட்டு கிழக்கு மாகாணத்தின் கல்வியின் தரத்தினை மேம்படுத்துவதற்கு தன்னாளான பங்களிப்பினை வழங்கியுள்ளார். 

ஒரு சட்டத்தரணியான எம்.எம்.ஜவாத் மூதூர் தி/மு/அல்ஹிலால் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், ஜாமியா நளீமியா கலாபீடம், பேராதனை பல்கலைகழகம், களனி பல்கலைகழகம், இலங்கை திறந்த பல்கலைகழகம், மற்றும் தேசிய கல்வி நிருவகத்தில் (NIE) பல கற்கைநெறிகளிலும் தனது உயர்கல்வியினை கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *