
வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞனை இடைமறித்து போத்தலால் குத்தியதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞனின் அக்காவின் மகன் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பரந்தனைச் சேர்ந்த கார்த்திக் (வயது – 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பரந்தன் – புதுக்குடியிருப்பு வீதியில் பரந்தன் சந்தியிலிருந்து சுமார் 75 மீற்றர் தூரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துவிச்சக்கர வண்டியில் தனது அக்காவின் மகனுடன் சென்று கொண்டிருந்தபோதே கார்த்திக் போத்தல் குத்துக்கு இலக்காகியுள்ளார். முரண்பாடு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும், சந்தேகநபரைத் தெரியும் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் நான்கு பேர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.





