திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள், சத்தியப் பிரமாணத்துடன் தமது கடமைகளை சிறப்பாக ஆரம்பித்துள்ளனர்.
2022 ம் ஆண்டு செயற்படுத்த உள்ள செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை திருகோணமலை குளக்கோட்டம் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வு பிரதேச செயலாளர் பொ. தனேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என 200 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, பிரதேச செயலாளரினால் 2022 ம் ஆண்டு செயற்ப்படுத்த உள்ள செயற்பாடுகள்தொடர்பான விளக்கங்களும் தெளிவூட்டப்பட்டுள்ளன.






